Our Feeds


Sunday, September 28, 2025

Admin

ஜப்பானில் உள்ள இலங்கையர்களை சந்திக்கும் ஜனாதிபதி!


ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் டோக்கியோவில் ஜப்பானில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார். 

ஜப்பானுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி நேற்று (27) ஆரம்பித்து ஜப்பானை சென்றடைந்தார். 

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றால் நேற்று (27) ஏற்பாடு செய்யப்பட்ட எக்ஸ்போ 25 கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். 

நேற்றைய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இன்று (28) காலை ஷின்-ஒசாகா ரயில் நிலையத்திலிருந்து டோக்கியோவின் ஷின்கான்சென் ரயில் நிலையத்திற்கு பயணித்த ஜனாதிபதி, இன்று பிற்பகல் டோக்கியோவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார். 

தனது விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய மன்னரான நருஹிட்டோவை சந்திக்க உள்ளார். 

அத்துடன் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். 

டோக்கியோவில் இலங்கை மற்றும் ஜப்பான் வர்த்தக சபைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கை முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். 

இந்த விஜயத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெரத் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »