பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை குறித்த படகில் இருந்த பலர் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் வெள்ளத்தினால் இதுவரை 4,100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
