Our Feeds


Wednesday, September 17, 2025

Zameera

வங்கி துறை தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்


 வங்கி நிதி மற்றும் காப்பீட்டுத் துறை தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 


தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்ணான்டோ தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தற்போதைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு வங்கித் துறையின் ஆதரவு குறித்து பரந்த விவாதம் நடந்துள்ளது. 


டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மூலம் வங்கி மற்றும் நிதித் துறையின் செயல்திறனை அதிகரித்தல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்ட தற்போதைய திட்டத்தை விரிவுபடுத்தல் மற்றும் புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 


எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பிலான அனைத்து திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் கடல்சார் துறை, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் கடல்சார் தொழிலின் பங்களிப்பு, தற்போது செயல்படாத துறைமுகத்தைப் பயன்படுத்தி எவ்வாறு வருவாய் ஈட்டுபவது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »