Our Feeds


Friday, September 12, 2025

Zameera

உதய கம்மன்பில கைது குறித்து வெளியான தகவல்


 முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைதுசெய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னை கைதுசெய்யத் தயாராவதால், தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்க வேண்டும் என கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உதய கம்மன்பிலவை கைதுசெய்வது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளார்.


அதன்படி, குறித்த மனு பரிசீலனைக்காக எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »