Our Feeds


Monday, September 29, 2025

Zameera

பெக்கோ சமன் மனைவியின் தொலைபேசிகள் குறித்து விசாரிக்க அனுமதி


 பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமன் மனைவியின் இரண்டு தொலைபேசிகள் குறித்து மேலதிக விசாரணை நடத்த கொழும்பு பிரதான நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் மனைவியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளின் கடவுச்சொல்லை நீக்குவது தொடர்பாகவும், அது குறித்து வாக்குமூலம் பெறுவதற்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று அனுமதி கோரியிருந்தனர்.


இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், சிறைச்சாலைக்கு சென்று குறித்த பெண்ணிடம் தொலைபேசியின் கடவுச்சொல் தொடர்பில் கேட்டறிந்து, விசாரணைகளை தொடர அனுமதி வழங்கியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »