Our Feeds


Wednesday, September 3, 2025

Sri Lanka

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!


2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 235 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 46,473 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 19,764 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 12,500 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 12,294 சுற்றுலாப் பயணிகளும், இத்தாலியிலிருந்து 12,247 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 10,495 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »