அரசியல் பிரமுகர்கள் பலரதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்ததான விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதனை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெளியிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களின் சொத்து விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. அமைச்சர் குமார ஜெயக்கொடி
காணிகள் மற்றும் வீடுகள் - 58,500,000 ரூபாய்
தங்க நகைகள் - 5,000,000 ரூபாய்
வாகனங்கள் - 52,500,000 ரூபாய்
முதலீடு - 43,628,557 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 593,936 ரூபாய்
மொத்த சொத்துக்களின் மதிப்பு - 160,222,493 ரூபாய்
2. பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க
காணிகள் மற்றும் வீடுகள் - 4,490,850 ரூபாய்
தங்க நகைகள் - 1,512,000 ரூபாய்
வாகனங்கள் - 9,000,000 ரூபாய்
முதலீடு - 10,242,711 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 13,189,524 ரூபாய்
- 153,499 அமெரிக்க டொலர்
3. பிரதி அமைச்சர் டி.பி. சரத்
காணிகள் மற்றும் வீடுகள் - 8,800,000 ரூபாய்
தங்க நகைகள் - 1,000,000 ரூபாய்
வாகனங்கள் - 7,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 638,033 ரூபாய்
4. நஜித் இந்திக எம்.பி
காணிகள் - 6,000,000 ரூபாய்
தங்க நகைகள் - 700,000 ரூபாய்
வாகனங்கள் - 8,650,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 2,993,679 ரூபாய்
மொத்த சொத்துக்களின் மதிப்பு - 18,343,679 ரூபாய்
5. ரவி கருணாநாயக்க எம்.பி
காணிகள் மற்றும் வீடுகள் - 130,000,000 ரூபாய்
தங்க நகைகள் மற்றும் கைக்கடிகாரம் - 21,500,000 ரூபாய்
வாகனங்கள் - 30,600,000
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 9,751,495 ரூபாய்
15,064 அமெரிக்க டொலர்
141 பிரித்தானிய பவுண்ஸ்
மொத்த சொத்துக்களின் மதிப்பு - 191,851,495 ரூபாய்
6. ரோஹித அபேகுணவர்தன எம்.பி
காணிகள் மற்றும் வீடுகள் - 120,400,000 ரூபாய்
தங்க நகைகள் - 3,310,000 ரூபாய்
வாகனங்கள் - 62,200,000
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 38,496,539
மொத்த சொத்துக்களின் மதிப்பு - 224,206,539 ரூபாய்
