Our Feeds


Thursday, September 25, 2025

Zameera

போர்த்துக்கல் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா உள்ளிட்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் இணைந்து கொண்டனர். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »