Our Feeds


Friday, September 26, 2025

Zameera

மார்பகப்புற்றுநோய் அதிகரிப்பு


 நாடு முழுவதும் தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் சம்பவங்களும், அதனுடன் தொடர்புடைய மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்தியாளர் சந்திப்பில் உறையாற்றிய தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்ட பணிப்பாளர் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெருமா, 2022 ஆம் ஆண்டில் 19,457 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


இவர்களில் 5,477 பேர் மார்பகப் புற்றுநோய் நோயாளிகள், இது அனைத்து பெண் புற்றுநோய் நோயாளிகளில் 28 சதவீதம் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.


மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், கிட்டத்தட்ட 30 சதவீத நோயாளிகள் மேம்பட்ட நிலையில் கண்டறியப்படுகிறார்கள். இதனால் குணமடைவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுதோறும் 15,245 புற்றுநோய் தொடர்பான இறப்புகள் நிகழ்கின்றன, அவற்றில் 798 மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய சமூக மருத்துவர் ஹசரேலி பெர்னாண்டோ, 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் சுய மார்பகப் பரிசோதனைகள் அல்லது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »