Our Feeds


Monday, September 8, 2025

Zameera

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை


 வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »