Our Feeds


Thursday, September 4, 2025

Admin

பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேக நபர் கைது!


பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் பேலியகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் பேலியகொடை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான ஒருவர் ஆவார். 

களனி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

சந்தேக நபர் பல தடவைகள் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மாணவியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »