Our Feeds


Saturday, September 20, 2025

Zameera

ரயிலில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள்


 கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில், நேற்று (19) கைவிடப்பட்ட பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


குறித்த பையை மீட்ட புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புகையிரத அதிபரிடம் அதனை ஒப்படைத்துள்ளனர். 


பையை திறந்து சோதனை செய்ததில் அதில் 250 பக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பையை மீட்டதோடு, போதைப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »