Our Feeds


Thursday, September 11, 2025

Zameera

இன்று பல தடவைகள் மழை பெய்யும்


 மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சில இடங்களில் 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »