Our Feeds


Tuesday, September 30, 2025

Sri Lanka

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு! - எரிசக்தி அமைச்சு


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, சில எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு ரூ.06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.335 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

அதேபோல், லங்கா ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ.06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.277 ஆகும். சூப்பர் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.

மேலும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.05 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை  ரூ.180 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »