Our Feeds


Tuesday, September 9, 2025

Zameera

நேபாள மோதல்கள்: இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

நேபாளத்தில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டில் உள்ள சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் பிற சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அந்நாட்டில் 102 இலங்கையர்கள் வசிப்பதுடன், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் தேவையான உதவிகளை வழங்க நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

நேபாள இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

நேளாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »