எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்துடன் தொடர்புடைய ஜீப் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற பஸ் எதிரே வந்த ஜீப்பில் மோதி கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று வியாழக்கிழமை (04) பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் பயணிகளை மீட்க உதவிய இரண்டு நபர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
