Our Feeds


Thursday, October 2, 2025

SHAHNI RAMEES

ஒலுவில் குழந்தை கைவிடல் சம்பவம்!: 17 வயது தாய்-தந்தைக்கு விளக்கமறியல்...

 

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை, ஒக்டோபர் 3 வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நேற்று (01) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில், குழந்தையை கைவிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் தந்தை ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

17 வயதுடைய இந்தப் பெற்றோர்கள், திருமணமாகாத உறவின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். 

தந்தையின் உறவினர்கள் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தாய் வீட்டில் குறித்த பெண் குழந்தையைப் பிரசவித்தார். 

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார். 

இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். 

இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது. 

இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »