Our Feeds


Sunday, October 19, 2025

Sri Lanka

இலங்கையில் மீண்டும் மலேரியா நோயாளர்கள் அதிகரிப்பு!


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடத்திலேயே மலேரியா நோய் அடையாளம் காணப்படுவதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன, 071 284 1767 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் மலேரியா தொடர்பான தகவல்களைப் பெற முடியும் என்று கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »