அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வலய பாடசாலைகளில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) அக்கரைப்பற்று பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அக்கரைப்பற்று அமைப்பாளருமான சபீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜவாத் (ரஸ்ஸாக்), கிழக்கிழங்கை அரபிக் கல்லூரியின் அதிபர் அஷ்ரப் (ஸர்க்கி), உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
