Our Feeds


Friday, October 17, 2025

Zameera

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்


 ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »