Our Feeds


Monday, October 27, 2025

Zameera

மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு


 தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.  


இந்த எச்சரிக்கை இன்று (27) மாலை 4:00 மணி முதல் நாளை (28) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

இதற்கமைய, அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை (Orange) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:  

காலி மாவட்டம்:  

நாகொடை  

எல்பிட்டிய  

பத்தேகம  

கண்டி மாவட்டம்:  

யட்டிநுவர  

கேகாலை மாவட்டம்:  

கேகாலை  

மாவனெல்ல  

யட்டியாந்தோட்டை  

அரநாயக்க  

தெஹிஓவிட்ட  

ரம்புக்கனை  

இரத்தினபுரி மாவட்டம்:  

கலவான  

எஹலியகொட  

இரத்தினபுரி  

இதேவேளை விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள முதலாம் நிலை (Yellow) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:  

கொழும்பு மாவட்டம்:  

சீதாவாக்கை  

பாதுக்க  

காலி மாவட்டம்:  

நெலுவ  

யக்கலமுல்ல  

களுத்துறை மாவட்டம்:  

இங்கிரிய  

வலல்லாவிட்ட  

ஹொரணை  

கண்டி மாவட்டம்:  

தெல்தோட்டை  

தொளுவ  

உடுநுவர  

உடபலாத  

பாததும்பர  

பாதஹேவாஹெட்ட  

கங்க இஹல கோரள  

பஸ்பாகே கோரள  

உடுதும்பர  

கேகாலை மாவட்டம்:  

ருவன்வெல்ல  

வரக்காபொலை  

புலத்கொஹுப்பிட்டிய​ை  

கலிகமுவ  

குருநாகல் மாவட்டம்:  

ரிதிகம  

அலவ்வ  

நாரம்மல  

மல்லவப்பிட்டிய  

மாத்தளை மாவட்டம்:  

ரத்தோட்டை  

யட்டவத்த  

உக்குவலை  

பள்ளேபொல  

லக்கல  

நாவுல  

அம்பன்கங்க கோரள  

மாத்தறை மாவட்டம்:  

வெலிப்பிட்டிய  

நுவரெலியா மாவட்டம்:  

அம்பகமுவ  

ஹங்குராங்கெத்த  

வலப்பனை  

இரத்தினபுரி மாவட்டம்:  

இம்புல்பே  

கிரிஎல்ல  

குருவிட்ட  

அயகம  

பெல்மதுல்ல

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »