Our Feeds


Friday, October 10, 2025

SHAHNI RAMEES

அமைச்சரவை மாற்றம்! - இரண்டாக மாறிய முஸ்லிம் பிரதி அமைச்சர்கள்!

 

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பின்வருமாறு 

அமைச்சரவை அமைச்சர்கள் 

01.பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் 

02.அனுர கருணாதிலக - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் 

03.வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க - வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் 

பிரதி அமைச்சர்கள் 

01.கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் 

02.டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் 

03.எம்.எம். மொஹமட் முனீர் - சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் 

04.எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

05.வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர் 

06.அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் 

07.எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

 

08.யு.டி. நிஷாந்த ஜயவீர - பொருளாதார அபிவிருத்தி பிரதிய அமைச்சர்

 

09.கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன - வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »