மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்து கோரல் இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்களின் கருத்து கோரல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் இறுதி அமர்வு இன்று மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மூலம் மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
அனைத்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
