அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ ஆகியோருக்கிடையில் நேற்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
