மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3690 ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகவும் காணப்படுகிறது.
