Our Feeds


Tuesday, October 28, 2025

SHAHNI RAMEES

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது மலேசிய கடலோர காவற்படை கப்பல்!

 

மலேசிய கடலோர காவற்படை கப்பலான ‘KM BENDAHARA’ திங்கட்கிழமை(27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

குறித்த கப்பலை இலங்கை கடற்படை சம்பிரதாயபூர்மாக வரவேற்றுள்ளது.

‘KM BENDAHARA’ என்ற கப்பல் 64.16 மீற்றர் நீளமுள்ளது. இது 50 பேர் கொண்ட அங்கத்துவ குழுவினரை கொண்டுள்ளதுடன் இதன் தரைமை அதிகாரியாக, மொஹமட் ஃபஹிமி பின் உமர் தலைமை தாங்குகிறார்.

இந்த கப்பலின் பணியாளர்கள் நாடு முழுவதும் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


‘KM BENDAHARA’ தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »