Our Feeds


Friday, October 3, 2025

SHAHNI RAMEES

O/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

 




கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத்

தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 


அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 


அதேநேரம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


எதிருவரும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 


இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால், பின்வரும் தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922. 


அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »