களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவுக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில், அவருக்குப் பொலிஸார் வழங்கிய பாதுகாப்பு குறித்துப் பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்கள் அரசியல் அல்லாத காரணங்களுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ள கருத்து, பாராளுமன்ற உறுப்பினர் வேறு ஏதேனும் சட்டவிரோத செயலில் அல்லது தனிப்பட்ட விடயங்களில் ஈடுபட்டதன் காரணமாகவே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம் என்ற உணர்வை அளிப்பதாகவும் கூறியுள்ளது.
அது என்ன என்பதைச் சரியாக அறிவிப்பது பொலிஸ்மா அதிபரின் பொறுப்பாகும் என்றும், அவ்வாறு செய்யாமல் மறைமுகமாக அறிக்கைகளை வெளியிடுவது பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும் என்பதால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வௌியிட்டுள்ள அறிக்கை......

