ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொரட்டுவ தொகுதி அமைப்பாளராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதம் நேற்று புதன்கிழமை (08) பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கட்சி அலுவலகத்தில் வைத்து, அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது.
