Our Feeds


Saturday, November 29, 2025

SHAHNI RAMEES

சீரற்ற வானிலை: உயிரிழப்பு 159 ஆக அதிகரிப்பு!

 

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இன்று (29) இரவு 8.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அதன்படி, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல், 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »