Our Feeds


Thursday, November 20, 2025

Zameera

ஜப்பான் துறைமுகத்தில் பெரும் தீவிபத்து: 170 கட்டிடங்கள் நாசம்


 ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரத்திலுள்ள துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.


மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.


இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.


இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ள நிலையில். ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »