Our Feeds


Thursday, November 20, 2025

SHAHNI RAMEES

ஓட்டமாவடி பிரதேச சபை, மக்கள் காங்கிரஸ் வசமானது.

 


ஓட்டமாவடி பிரதேச சபை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

தலைவர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் வழிகாட்டலில் மக்கள் காங்கிரஸ் வசமானது.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ்.ஹலால்தீன் சற்றுமுன் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இதன் போது,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சி, சுயேட்சைக்குழு உறுப்பினர், தமிழரசுக்கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் உள்ளடங்களாக 11 உறுப்பினர்களும் ஏகமனதான ஆதரவுகளை வழங்கியிருந்தனர். 

தவிசாளர் பதவியைப்பெற்றுக்கொண்ட எம்.எச்.எம்.பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத்தொடந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »