சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவங்களில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கிழக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கிழக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால், இன்று திட்டமிடப்பட்டிருந்த ஆறு நீண்ட தூர நகரங்களுக்கு இடையேயான மற்றும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அம்பன்பொல, கல்கமுவ மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகள் உட்பட மீ ஓயா நதிப் படுகையைச் சுற்றி சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் சிற்றூந்து ஒன்று தடம்புரண்டு வீழ்ந்து மூழ்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று உயிரிழந்தனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் 107 ஆவது மைல்கல் டெஸ்போர்ட் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 170க்கு மேற்பட்ட அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அவற்றில் பதுளை மாவட்டத்தில் 16 உயிரிழப்புகளுடன் சேர்த்து மொத்தமாக 26 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதில் கடந்த வாரம் கடுகண்ணாவில் இடம்பெற்ற 6 உயிரிழப்புகளும் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன், நுவரெலியா மாட்டத்தில் இதுவரை 4 பேர் காணமல் போயுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று காலை வரையான காலப்பகுதியில் 140க்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்ற மண்சரிவுகள் குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 வீதிகளும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பதை பொறுத்து இந்த நிலைமைகள் மாற்றமடையலாம் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா வலப்பனை மத்துரட்ட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
