Our Feeds


Thursday, November 27, 2025

Zameera

மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அருகில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்தது 


 நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் சாயந்ததால் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிப்பு.

இச் சம்பவம் இன்று மாலை 5 மணிக்கு இடம் பெற்று உள்ளது.

இதனால் மஸ்கெலியா ஹட்டன் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் தூரத்தில் பாரிய வாகை மரம் சாய்ந்தது மரத்தை வெட்டி அகற்ற நோர்வூட் பொலிசார் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் 

இப் பகுதியில் கன மழையுடன் காற்று வீசுவதால் இந்த மரம் சாய்ந்தது.

மஸ்கெலியா நிருபர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »