Our Feeds


Saturday, November 8, 2025

Zameera

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும் லொறியுடன் சந்தேகநபர் கைது


 சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஒரு லொறியுடன் சந்தேகநபர் ஒருவர், துங்கல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

துங்கல்பிட்டிய - கபுங்கொட பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  1,943 கிலோகிராம் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

துங்கல்பிட்டிய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »