Our Feeds


Wednesday, November 26, 2025

Sri Lanka

ஹப்புத்தளை பகுதியில் மண்சரிவு!

பதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும், பெரகலைக்கும் இடையிலான பகுதியில் இன்று (26) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது.


இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து ஹப்புத்தளை நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து குறித்த வீதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டன.


இந்நிலையில் பதுளை - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து ஒரு மருங்கில் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »