Our Feeds


Monday, December 8, 2025

Zameera

மனித பாவனைக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்


 அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில், வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று (7) முத்திரையிடப்பட்டது. 


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு (1926) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த இறைச்சித் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சம்பந்தப்பட்ட கால்நடை பண்ணையை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டு, அந்த இறைச்சித் தொகையை முத்திரையிட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலஸ்ஸ தெரிவித்தார். 

இதன்படி, குறித்த இறைச்சியின் மாதிரிகள் நாளை (8) அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 

பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »