இலங்கைக்கு அமெரிக்கா 2 மில்லியன் டாலர் உதவி.
‘டிட்வா’ புயலைத் தொடர்ந்து, இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அவசரகால மனிதாபிமான உதவியை வழங்குவதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
அத்துடன், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக மூலோபாய விமானப் போக்குவரத்து (strategic airlift) ஆதரவையும் அது வழங்குகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய, அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசாங்கம் மற்றும் நிவாரணப் பங்காளிகளுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், இப்புயலால் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
