Our Feeds


Monday, December 1, 2025

Zameera

மாவிலாறு பகுதியிலிருந்து 309 பேர் கடற்படையினரால் மீட்பு


  மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 309 பேர் கடற்படைக் குழுக்களால்   பாதுகாப்பாக மீட்கப்பட்டு மூதூரில் உள்ள கல்கந்த விகாரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, கடற்படையினர் மூதூர் கடற்கரையில் தரையிறங்கும் படகு மற்றும் கடலோர ரோந்து படகுகளை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதேவேளை குறித்த பகுதிகளில நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதோடு  பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »