Our Feeds


Wednesday, December 3, 2025

Zameera

மீட்புப் பணிகளை ஆய்வு செய்த சந்தோஷ் ஜா


  

 கொழும்புக்கு  அருகே உள்ள சேதுவத்தையில்  இடம்பெற்று  வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (02) ஆய்வு செய்தார்.

 

களனி ஆற்றின் கரையில் உள்ள நதீகமவைச் சுற்றியுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில்  அத்தியாவசியப் பொருட்களை வெளியேற்றுவதற்கும்  நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதற்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் வீடு வீடாகச் சென்றனர்.

 

இதேவேளை   குறித்த பகுதிக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை ஆராய்ந்ததோடு  அப்பகுதியில் உள்ள  ஊர்மக்களுடன்   கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

 

இதேவேளை சில பகுதிகளில் 6 முதல் 8 அடிக்கு கீழ் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதோடு   வலுவான நீரோட்டங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »