Sivah Ramasamy Facebook post 👇👇👇
இஸ்ரேலுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு அழைப்பு,
சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு வந்தது.செய்தியாளர்கள் பொதுவானவர்கள் , யார் அழைத்தாலும் போகலாம், அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். நீங்கள் சென்று வாருங்கள் என்று நண்பர் ஒருவர் கூறினார்..
நீங்கள் செல்ல மறுத்தால், அந்நாட்டின் உளவுத்துறை உங்களை கணக்கில் வைத்திருக்கும் என்றும் அவர் சொல்லி வைத்தார்.. ( அவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்று என்னை நினைத்தால் அது எவ்வளவு வீக்கான உளவுத்துறையாக இருக்கும் )
அப்படியானால் இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களை பந்தி பந்தியாக
எழுதிவிட்டு அவர்கள் செலவில் அங்கு செல்வதா ? இல்லை என்று மறுத்துவிட்டேன்.. எனக்குத் தெரிந்த ஊடகர்கள் சென்றார்கள்.. அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டார்கள்..
சொல்ல வந்தது இதுதான்..
அரச பயணமாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இஸ்ரேல் செல்கிறார்..
பலஸ்தீன படுகொலைகளை கண்டித்து ஒரு காலத்தில் பேசிய அவர் , இந்த இஸ்ரேல் பயணம் செல்வதை சுயசிந்தனையில் தான் எடுத்தாரா?தெரியவில்லை..
வெளிவிவகார பிரதி அமைச்சர் என்ற பதவி கிடைக்குமென அவர் முன்னரே அறிந்திருந்தால், பலஸ்தீன ஆதரவுப் போராளியாக தன்னை காட்டிக் கொண்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்..
எப்படி இருந்த நா இப்படி ஆகிட்டேன் என்கிற விவேக்கின் காமெடி, இந்த நேரம் பார்த்து நினைவில் வந்து தொலைக்கிறது..
