இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அனுராதபுர மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்தினை இழந்து உள்ள நிலையில்…
அனுராதபுர மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேசத்தில் பலலுவெவ கிராமத்திற்கான போக்குவரத்து நான்கு பக்கங்களிலும் தடைப்பட்டதனால் அன்றாட கூலித்தொழிலாலிகள் மற்றும் பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலைமையினை கருத்தில் கொண்ட பலலுவெவயில் இயங்கும் விளையாட்டுக் கழகமான ROLEX விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்கள் ஒன்றிணைந்து அவ்வாறான குடும்பங்களுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் பகல் உணவுகளை சமைத்து வழங்கினார்கள்….
இது பற்றி கழகத்தின் செயலாளர் கூறுகையில் - இந்த சந்தர்பமானது வெறும் விளையாட்டிற்கு மாத்திரம் பின்னால் சென்ற இளைஞர்களை சமூகத்தின் தேவை உணர்ந்து செயல்பட தூண்டும் ஒரு காரியமாக மாற்றியது, மற்றும் இதற்கும் உதவிய அனைவருக்கும் எமது கழகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
