Our Feeds


Saturday, December 13, 2025

Zameera

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக விஜேயதாச ராஜபக்ஷ நியமனம்


 (இராஜதுரை ஹஷான்)


முன்னாள்  நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேயதாச ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 எதிர்வரும் காலப்பகுதியில் கூடவுள்ள கட்சியின் நிறைவேற்றுச் சபையில் குறித்த நியமனம் வழங்கப்படும் என்று சுதந்திர கட்சியின் தலைவர் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவராகவும், மஹரகம தொகுதி அமைப்பாளராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »