Our Feeds


Wednesday, December 17, 2025

Zameera

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக டெல்லி பயணம்


 இந்திய மருத்துவ உதவிகள் குறித்து விசேட கவனம்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (17) இந்தியா, புதுடெல்லியை நோக்கிப் பயணமாகவுள்ளார். 


இந்த விஜயத்தின்போது இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்துக் கலந்துரையாடுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.


பேரிடரால் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு இந்தியா வழங்கி வரும் நிதி, அபிவிருத்தி மற்றும் மருத்துவ உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த விஜயம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் உள்ளிட்ட பல தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் எதிர்கால மருத்துவ உதவிகள் குறித்தும் இந்த விஜயத்தின்போது ஆராயப்படுமென்றும் அறிய முடிகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »