Our Feeds


Sunday, December 28, 2025

Zameera

பட்ஜெட் தோல்வியால் அரசுக்கு பாதிப்பில்லை - பிரதியமைச்சர் மஹிந்த


 உள்ளூராட்சியில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், தோற்கடிக்கப்படுவது திசைகாட்டியின் வரவு செலவுத் திட்டம் அல்ல என்றும் அது மக்களின் வரவு செலவுத் திட்டமென்றும் தோற்கடிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான ஏராளமான திட்ட முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சியில் இருந்து மக்களுக்கு சேவைகளை உகந்த முறையில் வழங்க இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும் திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஏதேனும் ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் இரண்டு தடவைகள் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது என தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்றாவது வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், குறித்த உள்ளூராட்சி சபையின் தலைவர் இயல்பாக பதவியில் இருந்து விலக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »