Our Feeds


Saturday, February 7, 2026

SHAHNI RAMEES

3வது நாளாக தொடரும் மீனவர்களின் போராட்டம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி!


உலவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச்களைப்

பயன்படுத்தி மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மீனவர்கள் குழுவொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமை (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.


குறித்த தடையை நீக்கக்கோரி முல்லைத்தீவு, கோகிலாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் குழு, வியாழக்கிழமை (05) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


மீனவர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் டி. கமகேவுடன் கலந்துரையாடினர், ஆனால் அது தோல்வியடைந்தது, இதன் காரணமாக, அந்தக் குழுவினர்வெள்ளிக்கிழமை (06) கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று, கொழும்பு பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித்தை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.



அதேநேரம், வெள்ளிக்கிழமை (06) மதியம் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்துடன் மீனவர்கள் நடத்திய கலந்துரையாடலும் தோல்வியடைந்தது.


இந்தப் பிரச்சினைக்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு, வலை விதிகளை மீறும் சிலரின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »