Our Feeds


Friday, February 6, 2026

Zameera

கத்தாரில் நடைபெற்ற இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வு


 ஜே. எம். பாஸித் - கத்தார் 

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தார் – தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு புதன்கிழமை (04) காலை நடைபெற்றது.

தூதரக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் ரொஷான் சித்தாரா கான் அசார்ட் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் விசேட மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன.இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் விடுக்கப்பட்ட சுதந்திர தினச் செய்தி இதன்போது வாசிக்கப்பட்டது. 

இவ்வாண்டு சுதந்திர தினம் “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »