Our Feeds


Saturday, February 21, 2026

Zameera

காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைக்கப்பட்ட ஜாமிஉல் மனார் புதிய பள்ளிவாசலை கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்..!


 காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைக்கப்பட்ட ஜாமிஉல் மனார் புதிய பள்ளிவாசலை கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்..!


ஹிரா பவுண்டேஷன் அனுசரணையில் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசலை, ஹிரா பவுண்டேஷன் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (20) ஜும்ஆ தொழுகையின் பின்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


காத்தான்குடி கர்பலா கிராமம், 1980 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அகமட் பரீட் அவர்களுடைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.


இப்பள்ளிவாசலுடன் இணைந்து, ஆண் மற்றும் பெண் ஜனாஷாக்களை தனித்தனியாக குளிப்பாட்டுவதற்கான வசதிகளுடன் கூடிய கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்,


“இப்புதிய ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்து ஜனாஷா குளிப்பாட்டும் இடத்தையும் திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஜனாஷாக்களை குளிப்பாட்டுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனை கருத்திற்கொண்டு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.


டாக்டர் அகமட் பரீட் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் இவ்வாறான ஒரு பெரிய ஜும்ஆ பள்ளிவாசலை கட்டி திறந்து வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.


மேலும், இத்திட்டத்திற்கு உதவிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன்விரும்பிகள் அனைவருக்கும் அவர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


இன்று திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் ஜும்ஆ பிரசங்கத்தை அஷ்ஷெய்க் ஜெலீல் மதனி அவர்கள் நிகழ்த்தினார்.


-- ஊடகப் பிரிவு






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »