வாத்துவ, மொரந்துடுவ வீதியில் மெலேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த பேருந்து ஒன்றின் சாரதி உயிரிழந்தார்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இன்று (24) காலை இந்த விபத்து இடம்பெற்றதுடன், இதில் இரண்டு பேருந்து சாரதிகளும் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த விபத்து காரணமாக பாணந்துறை - மொரொந்துடுவ வீதி, மெலேகம பகுதியில் தடைப்பட்டிருந்ததுடன், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
