Our Feeds


Wednesday, February 18, 2026

Zameera

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்


 சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்தச் சந்திப்பு நேற்று (17) கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. 

இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அதற்காக தற்போதைய அரசாங்கம் காட்டிய அர்ப்பணிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிலவும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »